தென்மராட்சி மீசாலையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்ததாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைக்காக, சடலம் உடற்கூறாய்வு பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 14ஆம் திகதி இரவு மீசாலை, புத்தூர் சந்திக்கு அண்மையாக விபத்து நடந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவர் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மின்கம்பத்தில் மோதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞனின், பின் தலையில் காயமிருந்தது.
உயிரிழந்த இளைஞனின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது. பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்று இல்லையென்பது உறுதியானது.
மரணத்தில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, உடற்கூறாய்விற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று அனுப்பப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1