அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்த இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, அங்கிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுடன் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
சந்திப்பு நிறைவடைந்த நிலையில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கீழ்கண்டவாறு பதிவொன்றை இட்டுள்ளார்.
என்னைச் சந்திக்க கைதிகள் குழு விடுத்த வேண்டுகோளின் பேரில், அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுராதபுரம் சிறைக்கு இன்று சென்றேன். குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் அவர்களின் மறுவாழ்வுக்கு உட்டுபத்தல் மற்றும் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைப்பது உள்ளிட்ட அவர்களின் பிரச்சினைகளை நான் கவனிப்பேன் என்று அவர்களுக்கு உறுதியளித்தேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
On a request by a group of prisoners to meet me, I visited Anuradhapura Prison today to hold talks with them to discuss their concerns. I assured them I would look into their issues including their rehabilitation & reintegration into society once they are cleared of charges.
— Namal Rajapaksa (@RajapaksaNamal) September 16, 2021
முன்னாள் சிறைச்சாலைகள் அமைச்சரால் தமிழ் அரசியல் கைதிகள் காலில் விழ மிரட்டப்பட்டுள்ள நிலையில், அவர்களின் அந்த விவகாரத்தை ஆராயாமல், விடுதலையான பின்னர் உதவுவதை பற்றி பேசவா இப்பொழுது சென்றீர்கள் என ருவிட்டரில் பலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.