அஜித் நடித்து முடித்துள்ள வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீஸர் ரிலீஸ் தேதி ஆகியவை குறித்த தகவல்கள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் சற்று முன் திடீரென சமூக வலைதளங்களில் ’வலிமை’ டீசர் தேதி குறித்த ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வலிமை படத்தின் டீஸர் இன்று இரவு 12 மணிக்கு வெளியாக உள்ளதாக அஜித் ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்ததை அடுத்து ’வலிமை’ டீசர் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகியுள்ளது. ஆனால் இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் படக்குழுவினர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் இதற்கு முந்தைய ’வலிமை’ படத்தின் புரமோஷன்கள் அனைத்தும் முன்னறிவிப்பின்றி திடீரென வெளிவந்தது என்பதால் ’வலிமை’ படத்தின் டீசரும் அதேபோல் இன்று வெளிவர வாய்ப்பு இருப்பதாக அஜித் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அஜித் ரசிகர்களின் நம்பிக்கை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.