26.2 C
Jaffna
January 21, 2025
Pagetamil
இலங்கை

யாழில் நேற்று 155 பேருக்கு தொற்று!

யாழ் மாவட்டத்தில் நேற்று 155 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைகளில் 22 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். யாழ் மாவட்டத்தில் அன்ரிஜன் சோதனைகளில் 133 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேர், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 45 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர், மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேர், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேர், தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேர் என, 133 பேருக்கு தொற்று உறுதியானது.

இவர்களில் 8 பேர் 10 வயதிற்குட்பட்ட சிறார்கள்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் யாழ் மாவட்டத்தில் 22 பேருக்கு தொற்று உறுதியானது.

யாழ் போதனா வைத்தியசாலையில் 6 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 4 பேர், நொதேர்ன் சென்ரல் வைத்தியசாலையில் ஒருவர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 7 பேர், கோப்பாய் மாவட்ட வைத்தியசாலையில் 4 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

மானிப்பாயில் வீட்டில் உயிரிழந்த 51 வயது ஆணுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் தொற்று உறுதியானது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் கரையொதுங்கிய மற்றொரு மிதவை

Pagetamil

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க முடியாது – ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

east tamil

இலங்கையில் பிறந்த மியான்மார் குழந்தை

east tamil

நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சை வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் அதிரடி நடவடிக்கை

east tamil

இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் – சபாநாயகர் சந்திப்பு

east tamil

Leave a Comment