29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

முல்லைத்தீவை சேர்ந்த அரசியல் கைதி 8 ஆண்டுகளின் பின்னர் விடுதலை!

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த அரசியல் கைதியான நடராசா குகநாதன் கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் (16) இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, உடையார்கட்டினை சேர்ந்த நடேசு குகநாதன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து 2009.05.19 ஆம் திகதி படையினரால் கைதுசெய்யப்பட்டார்.

மூன்று ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் 2012.03.24 அன்று தொடக்கம் ஒரு ஆண்டு புனர்வாழ்வு பெற்று 2013.03.23 அன்று விடுதலை செய்யப்பட்டார்.

குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில் 2013.07.09 ஆம் திகதி அன்று தொலைபேசிமூலம் விசாரணைக்காக பயங்கரவாத விசாரணை பிரிவால் அழைத்து மீண்டும் கைதுசெய்து பூசா சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் 2015ஆம் ஆண்டு நியூமகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

இன்னிலையில் கடந்த 8 ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைவாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (16) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment