யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் மரணமாகிய ஒரு வயதுக் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடுப்பிட்டியைச் சேர்ந்த ஒரு வயதும் 3 மாதங்களும் நிரம்பிய குழந்தை புரைக்கேறிய நிலையில் நேற்று (15) அதிகாலை மந்திகை ஆதார மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தது.
அதன் பி சி ஆர் பரிசோதனை யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் குழந்தைக்கு தொற்று உறுதியானது.
இதேவேளை, இருதய நோயால் பீடிக்கப்பட்ட நிலையில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்த 4 மாதங்களேயான சிசு ஒன்றுக்கு, கொரோதனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், மந்திகை ஆதார மருத்துவமனை கொவிட்-19 சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மந்திகை ஆதார மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் கண்காணிக்கப்பட்ட வல்வெட்டித்துறையைச் சேரந்த 72 வயது பெண் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை திக்கத்தில் நள்ளிரவு சடலமாக மீட்கப்பட்ட 56 வயதுடைய பெண்ணின் சடலத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொவிட்-19 தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இளவாலை – சென்ஜேம்ஸ் பகுதியைச் சேர்ந்த விமலநாதன் சஸ்விந் என்ற ஆண் சிசுவே, இவ்வாறு நேற்று முன்தினம் (14) உயிரிழந்துள்ளது.