அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகள், இந்தோ-பசிபிக் வட்டாரத்துக்கான உத்தியோகபூர்வக் கூட்டணி ஒப்பந்தம் குறித்து அறிவித்துள்ளன.
3 நாடுகளும் தகவல், தொழில்நுட்பம் ஆகியவற்றை இன்னும் ஆழமாகப் பகிர்ந்துகொள்ள, அந்த ஒப்பந்தம் வகை செய்யும்.
இந்தோ-பசிபிக் வட்டாரத்தில், குறிப்பாக சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற்பகுதியில் சீனாவின் செல்வாக்கைக் கண்காணிக்கும் வண்ணம் அந்த வரலாற்றுச் சிறப்புவாய்ந்த ஒப்பந்தம் செய்யப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின்படி, அவுஸ்திரேலியா, அணுவாற்றல் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க அமெரிக்கா உதவ முன்வந்துள்ளது.
பிரான்ஸ், அவுஸ்திரேலியாவுக்குச் சாதாரண நீர்மூழ்கிக் கப்பல்களை விற்க, பல பில்லியன் டொலர் மதிப்புள்ள ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்திவருகிறது.
ஆகவே, அமெரிக்காவின் நடவடிக்கை பிரான்ஸைச் சினமூட்டக்கூடும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஆகியோர் காணொளி வழியாக ஒப்பந்தம் குறித்து அறிவித்தனர்.
சீனாவின் அதிகரித்துவரும் செல்வாக்கைச் சமாளிக்க, இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் அமெரிக்கா கவனம் செலுத்திவருகிறது.
அந்த முயற்சியின் ஒரு பகுதியே, இந்த முத்தரப்புக் கூட்டுப் பங்காளித்துவம் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.