இலங்கையின் முக்கிய சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவராக நந்தினி சேவியர் இன்று (16) காலை காலமாகினார். அவருக்கு வயது 72.
திருகோணமலையிலுள்ள அவரது வீட்டில் இன்று காலை 7.45 மணியளவில் அவர் காலமாகினார்.
கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அவர் காலமாகியுள்ளார். அவரது உடல் பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படும்.
யாழ்ப்பாணம், தென்மராட்சி, மட்டுவிலை பிறப்பிடமாக கொண்ட அவர் தற்போது திருகோணமலையில் வசிக்கிறார். சேவியர் என்ற இயற்பெயரை கொண்ட அவர், ஈழச்சிறுகதையில் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
ஆரம்பத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (சீனச்சார்பு) வாலிப சங்க இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1