கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றிற்கிலக்காகி உயிரிழந்துள்ளார்.
கட்டுகஸ்தோட்ட, மாவில்மட பகுதியில் வசிக்கும் வைத்தியர் ஜைத் ரஃபைதீன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர், ஓகஸ்ட் 18 அன்று பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அவர் கடந்த மூன்று வாரங்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.
அவரது உடல் இன்று மட்டக்களப்பு, ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1