2021 A/L பரீட்சைக்கு 2,922 விண்ணப்பங்கள் மட்டுமே!

Date:

எதிர்வரும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு 2,922 விண்ணப்பங்கள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை,  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்ற 6,589 விண்ணப்பங்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளன.

இரண்டு பரீட்சைகளிற்குமான விண்ணப்ப முடிவு திகதி இன்றாகும்.

பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை அதிபர்கள் மூலம் கல்வி அமைச்சிற்கு அனுப்ப வேண்டும்.

எவ்வாறாயினும், தற்போது சம்பள முரண்பாடுகள் காரணமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள முதன்மை தொழிற்சங்கங்கள் உயர்தர மாணவர்களின் விண்ணப்பங்களை அங்கீகரிக்கப் போவதில்லை என்று சமீபத்தில் முடிவு செய்தன.

அதன்படி, கல்வி அமைச்சில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக...

யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்து; பெருமளவு மருந்துகள் அழிவு… மின் ஒழுக்கு காரணம்?: யாழில் தீயணைப்பு வசதி இல்லாததை வெளிச்சமிட்ட சம்பவம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட...

தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்க 2 காரணங்கள்… – திருமாவளவன் விவரிப்பு

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்