சீனா அரசாங்கம் வழக்கும் 2021 future science prize விருதை பேராசிரியர் க்வோக்-யுங் யுஹன் மற்றும் பேராசிரியர். மலிக் பீரிஸ் ஆகியோர் வென்றுள்ளனர்.
2003 ஆண்டு சார்ஸ் மற்றும் மெர்ஸ் வைரஸ் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வுக்காக இவர்களுக்கு சீனாவால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் இதன்போது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விருது சீனாவின் நோபல் பரிசு என அழைக்கப்படுகிறது.
பேராசிரியர் மாலிக் பீரிஸ் ஹொங்கொங் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோயியல் துறை பேராசிரியராகவும், ஜங் பல்கலைக்கழகத்தில் யூன் க்வோக் நுண்ணுயிரியல் துறை பேராசிரியராகவும் உள்ளனர்.
2016 ஆம் ஆண்டு முதல், சீனாவின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளுக்கு அவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக “எதிர்கால அறிவியல் பரிசு” வழங்கப்படுகிறது.