மன்னாரில் நேற்று 95 பேருக்கு தொற்று!

Date:

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (11) மேலும் புதிதாக 95 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 11 நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 276 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விடுத்துள்ள கொரோனா தொற்று நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (11) மேலும் புதிதாக 95 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

-இவர்களில் 84 கொரோனா தொற்றாளர்கள் மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 11 நாட்களில் 276 கொரோனா தொற்றாளர்கள் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ் வருடம் மன்னார் மாவட்டத்தில் 1943 தொற்றாளர்களும், தற்போது வரை மாவட்டத்தில் மொத்தமாக 1960 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 22 கொரோனா தொற்று மரணம் நிகழ்ந்துள்ளது.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

63 வயது அவுஸ்திரேலிய அன்ரியுடன் உடலுறவு கொள்ள கடிதம் கொடுத்த 3 பேர் கைது!

உனவட்டுனவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரை,...

பொதுவேட்பாளராகும்படி மைத்திரிக்கு முதல் என்னையே கேட்டனர்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக, 2015...

பொலன்னறுவையில் நேற்று அதிக வெப்பம்

பொலன்னருவையில் நேற்று (செப்டம்பர் 2) நாட்டின் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 37.9°C...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்