25.8 C
Jaffna
December 26, 2024
Pagetamil
இலங்கை

4 வருடங்களின் பின் துலங்கிய மர்மம்: இலங்கையின் முன்னணி வர்த்தகரை மகனே கொன்றுவிட்டு நாடகம் ஆடினார்!

இலங்கையின் பிரபல தொழிலதிபர் ஷபீர் அப்பாஸ் குலாம்ஹுசைனின் மரணத்திற்கு காரணமானவர் என்ற சந்தேகத்தில் 4 வருடங்களின் பின்னர் அவரது இளைய மகன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அடம்எக்ஸ்போ லிமிடெட் உட்பட 9 நிறுவனங்களின் உரிமையாளரான ஷபீர் அப்பாஸ் குலாம்ஹுசைன், 2017 ஜூன் 9 அன்று, கொழும்பில் உள்ள அவரது அலுவலக வளாகத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அவர் இயற்கை மரணமெய்தியதாக குறிப்பிடப்பட்டு, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இருப்பினும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக 2018 ஆம் ஆண்டில் சிஐடியின் பொது புகார் பிரிவுக்கு கிடைத்த புகாரின் பேரில், மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

குலாம்ஹுசைனின் உடல் 2019 இல் தோண்டியெடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

பிரேத பரிசோதனையில் அவரது மரணம் ஒரு கொலை, இயற்கையான காரணங்களால் நிகழவில்லையென மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக நீண்ட விசாரணைக்குப் பிறகு, கொலை தொடர்பாக தொழிலதிபரின் 37 வயது இளைய மகன் அலி குலாம்ஹுசைனை சிஐடி கைது செய்துள்ளது.

கொலை நுட்பமாக திட்டமிடப்பட்டுள்ளது. தொழிலதிபர் இயற்கை மரணமடைந்ததை போல தோற்றமளிக்கும் விதமாக, மிக கச்சிதமாக இளைய மகனால் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

சொத்து பெறும் நோக்கத்தில் தந்தையை அவர் கொலை செய்ததாக சிஐடி சந்தேகிக்கிறது.

எத்துல் கோட்டையைச் சேர்ந்த சந்தேகநபர் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செப்டம்பர் 23 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3

இதையும் படியுங்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியிலிருந்து கழற்றி விடப்படும் கட்சிகள் எவை?: ஞாயிறு தீர்மானம்!

Pagetamil

கழுத்துக்குள் பாய்ந்த தடி அகற்றப்பட்டது: வவுனியா வைத்தியசாலையில் வெற்றிகரமான அறுவை சிகிச்சை!

Pagetamil

இலங்கையில் 2024 சுற்றுலா வருகைகள் 2 மில்லியனைத் தாண்டியது

east tamil

ஊடகவியலாளர்களுக்கு இனி அனுமதி இல்லை

east tamil

அனுரவை சந்திக்க முடியாவிட்டால் கழுத்தை அறுப்பேன்: வாளுடன் ரகளை செய்தவர் கைது!

Pagetamil

Leave a Comment