வவுனியா நெடுங்கேணி பகுதியில் நடமாடும் மருத்துவ சேவையினரால் 100 வயதான மூதாட்டிக்கு முதலாவது கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் அனைத்து மக்களும் தடுப்பூசியினை பெற்றுவருகின்றனர். சிலர் அச்சம் காரணமாக தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை. ஆனால் 100 வயது நிரம்பிய ஒரு முதியவர் தடுப்பூசி செலுத்த முன்வந்திருந்தார்.
நெடுங்கேணி, மருதோடைக்கிராமத்தில் வசிக்கும் 100 வயதுடைய அவர் கொரோனா தடுப்பூசி போட விரும்புவதாக கூறியதற்கிணங்க வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரின் நடமாடும் தடுப்பூசிச்சேவையின் மூலம் முதலாவது தடுப்பூசி நேற்று (11) வழங்கப்பட்டது.
இவ்வாறு இந்த வயதிலும் தடுப்பூசி போடவேண்டுமென்று விழிப்புணர்வுடைய ஒருவரிற்கு தடுப்பூசி வழங்கியமையையிட்டு பெருமை கொள்வதாக வவுனியா வடக்கு சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.