24.6 C
Jaffna
February 6, 2025
Pagetamil
கிழக்கு

காரைதீவு பிரதேச வீதிகளில் நடமாடிய மூவருக்கு தொற்று உறுதியானது!

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக‌ பிரிவில் சனிக்கிழமை ஊரடங்கு சட்டத்தை மீறி வீதியில் நடமாடிய 17 பேருக்கு மேற்கொண்ட அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகள் அடிப்படையில் மூவருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றைய அனைத்து பரிசோதனை முடிவுகளும் கொரோனா தொற்றை உறுதிப்படுத்தவில்லை. மேலும் இதன்போது 20 பி.சி.ஆர். மாதிரிகளும் எடுக்கப்பட்டதாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி தஸ்லிமா வஸீர் தெரிவித்தார்.

சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீரின் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், பாதுகாப்பு படையினர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நுளம்பு கள தடுப்பு பிரிவினர், இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு அண்டிஜென் பரிசோதனையின் போதே இந்த பொறுபேறுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

எனவே மக்கள் அத்தியவசிய தேவையை தவிர வீணாக வெளியில் வர வேண்டாம் என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி தஸ்லிமா வசீர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனையில் 12Kg கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

east tamil

திருகோணமலையில் நேரிய பெற்றோரியம் பயிற்சி

east tamil

வாழைச்சேனையில் குடும்பத் தகராறு காரணமாக 63 வயது நபர் கொலை

east tamil

திருகோணமலையில் அனைத்து மத உரிமைகள் பாதுகாப்பிற்கான அமைப்பினால் சுதந்திர தின நிகழ்வு

east tamil

மட்டக்களப்பில் மூவின மக்களின் பங்கேற்புடன் சுதந்திர தின கொண்டாட்டம்!

east tamil

Leave a Comment