ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்ட நிலையில் அங்கு அமெரிக்க இராணுவம் விட்டுவிட்டு வந்த இராணுவத் தளவாடங்களை தலிபான்கள் சேதப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க இராணுவ விமானம் ஒன்றை தலிபான்கள் பொம்மை போல் பாவித்து விளையாடும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லிஜியான் ஜாவோ. அந்த ட்வீட்டில் அவர், பேரரசர்களின் மயானங்களும் அவர்களின் ராணுவ தளவாடங்களும். தலிபான்கள் அமெரிக்க இராணுவ விமானங்களை ஊஞ்சலாக, பொம்மைகளாக மாற்றிவிட்டனர் என்று பதிவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறியதிலிருந்தே தொடர்ந்து அமெரிக்காவை சீனா கிண்டலடித்து வருகிறது.
இந்நிலையில் தான் இராணுவ விமானங்களை தலிபான்கள் பொம்மை போல் பயன்படுத்தும் வீடியோவை சினா வெளியிட்டு கிண்டல் செய்துள்ளது.
The graveyard of EMPIRES and their WAR MACHINES. Talibans have turned their planes into swings and toys….. pic.twitter.com/GMwlZKeJT2
— Lijian Zhao 赵立坚 (@zlj517) September 9, 2021
ஆப்கானிஸ்தான் கடந்த 15 ஆம் திகதி தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
அதன் பின்னர், காபூல் விமான நிலையம் மட்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நிலையில் ஜனாதிபதி பைடன் ஓகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறும் எனக் கூறியிருந்தார்.
அதன்படி ஓகஸ்ட் 31 ஆம் திகதி அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறிவிட்டன.
வெளியேறுவதற்கு முன்னதாக, காபூல் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தங்களுக்குச் சொந்தமான விமானங்கள், ஆயுதம் தாங்கிய வாகனங்கள், ஏவுகணை அழிப்பு அமைப்புகள் என மொத்தம் 73 வாகனங்களை அமெரிக்கப் படைகள் இனி பயன்படுத்தவே முடியாதபடி செயலிழக்கச் செய்துவிட்டே கிளம்பியது.