25.5 C
Jaffna
December 24, 2024
Pagetamil
இந்தியா

மீண்டுமொரு நிர்பயா: வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு இரும்பு கம்பியால் அந்தரங்கப் பகுதி சிதைக்கப்பட்ட பெண் மரணம்!

டெல்லியில் நிர்பயாவுக்கு நேர்ந்த அதே கொடுமை மும்பையிலும் ஒரு பெண்ணிற்கு நேர்ந்திருக்கிறது. வாகனத்தில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்த பின்னர் இரும்பு கம்பியால் அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பை சேதப்படுத்தி இருக்கிறான் கொடூரன். 2 நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பெண், இன்று காலையில் உயிரிழந்துள்ளார்.

டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு மருத்துவம் பயின்ற மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் ஓடும் தனியார் பேருந்துக்குள் வைத்து பாலியல் வன்புணர்வு செய்து கடுமையாக தாக்கப்பட்டு, அம்மாணவியின் பிறப்புறுப்பில் இரும்புக் கம்பியை கொண்டு கொடூரமாக சிதைக்கப்பட்டதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நிர்பயாவின் மரணம் இந்தியாவெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் கொலையாளி ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொள்ள மற்ற நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த வன்கொடுமைக்கு பின்னர் தான் சட்டங்கள் கடுமையாக பட்டிருக்கின்றன. ஆனாலும் வன்கொடுமைகள் மட்டும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

டெல்லியில் நிர்பயாவுக்கு நேர்ந்த கதியை போலவே மும்பையிலும் ஒரு பெண்ணுக்கு நேர்ந்து இருக்கிறது. மும்பை கைராணி சாலையில் நிர்வாண கோலத்தில் நிற்கும் ஒரு இளம்பெண்ணை ஆண் ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருக்கிறார் என்று போலீசாருக்கு தகவல் வர போலீசார் விரைந்து சென்றனர். போலீசார் போன போது இளம்பெண் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை மீட்டு ராஜா வாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மருத்துவமனையில் பெண்ணை பரிசோதனை மருத்துவர்கள், அப்பெண்ணுக்கு 34 வயது என்றும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருக்கிறார் என்றும், இரும்பு கம்பியால் அவரது பிறப்புறுப்பு சேதப்படுத்தப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர் .

இந்த குற்றத்தை செய்த குற்றவாளியை போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விரைந்து தேடினர். தீவிர தேடுதலில் மோகன் சவுகான் என்பவரை போலீசார் பிடித்து விட்டனர். .

சம்பவத்தின்போது அவன் பயன்படுத்திய டெம்போவை போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர். வேனில் ரத்த கரைகள் இன்னும் இருக்கின்றன. தடயவியல் நிபுணர்கள் அந்த வேனை ஆய்வு செய்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட அந்த பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலையில் உயிரிழந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றிய பெண்: 19 வயது இளைஞருடன் ஓட்டம்

Pagetamil

இன்ஸ்டா காதலால் விபரீதம்: நீரில் மூழ்கி 3 பேர் பலி!

Pagetamil

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

Pagetamil

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

Leave a Comment