நடிகை வித்யுலேகாவிற்கும், தொழிலதிபரான சஞ்சய்க்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
கெளதம் மேனன் இயக்கத்தில், ஜீவா, சமந்தா நடிப்பில் வெளியான ‘நீதானே என் பொன் வசந்தம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் வித்யுலேகா. அந்தப்படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து இருப்பார்.
வீரம், புலி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமான நடிகையாக வலம் வந்தவர் வித்யுலேகா. பப்ளியான லுக்கில் காமெடியில் கலக்கி வந்த சமயத்தில் உடல் எடையை குறைக்கும் முயற்சிகளில் இறங்கினார் வித்யுலேகா. அதன்பின்னர் ஓரளவிற்கு உடலை குறைத்து அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படத்தை தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஊரடங்கு சமயத்தில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் உடன் வித்யுலேகாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. குடும்ப உறுப்பினர்கள் மட்டும் அதில் கலந்து கொண்டனர். தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார் வித்யுலேகா. அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.