இலங்கையின் தேசிய கபடி அணிக்கு தெரிவான கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கணைகள் மூவருக்கும் கபடி பயிற்சிக்குரிய உபகரணங்கள் இன்று (11) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு வளப்பற்றாக்குறைகளுடன் திறமையாக விளையாடிய கிளிநொச்சி உருத்திரபுரம் உழவர் ஒன்றிய வீராங்கணைகள் மூவரும் கடந்த மாதம் இடம்பெற்ற தேசிய அணிக்கான தெரிவின் போது தெரிவாகியிருந்தார்கள்.
இவர்கள் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஆசிய கபடி போட்டியில் பங்குபற்றுவதற்காக சீனாவுக்கு பயணமாகவுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபடுதற்கான பொருட்களை பற்றாக்குறையாக இருந்த நிலையில் கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் கனடாவில் உள்ள விளையாட்டுக் கழகம் ஒன்றினால் வழங்கப்பட்ட 50 ஆயிரம் ரூபா நிதியில் தேசிய அணிக்கு தெரிவான வீராங்கணைகளுக்கு அவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.