மத்திய மாகாணத்தில் ஏனைய மாகாணங்களை விட ஆசிரியர்களின் எண்ணிக்கை மேலதிகமாக இருந்ததால் ஆசிரிய உதவியாளர்கள் 149 பேருடைய நியமனங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோட்ட தொழிலாளர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் புஸ்பாநந்தன் குறிப்பிட்டுள்ளார்.
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது மத்திய மாகாண கல்வி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் இதனை தன்னிடம் தெரிவித்ததாக விஸ்வநாதன் புஸ்பாநந்தன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டு அதற்கு பிரதான காரணமாக கோரோணா தொற்று நோய் பரவல் காரணமாகும். இதற்கிடையில் கல்வி அமைச்சின் புதிய சுற்றுநிருபம் ஒன்றும் வெளிவந்துள்ளது. அதில் புதிய நியமனங்கள் வழங்க வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும் இந்த நியமனங்களை வெகுவிரைவில் வழங்குமாறு ல்வி அமைச்சரின் செயலாளரிடம் புஸ்பானந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.