நுவரெலியாவில் காணாமல் போன யுவதி 5 நாட்களின் பின் காட்டுக்குள்ளிருந்து மீட்பு!

Date:

நுவரெலியா, டன்சினன் காட்டுப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற போது மாயமான 25 வயது யுவதி,  ஐந்து நாட்களுக்குப் பிறகு கிகிளியமான காட்டு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா வட்டபஹால பகுதியில் வசிக்கும் ஜெயபாலன் கற்பகதாரணி (25) என்பவரே மீட்கப்பட்டுள்ளார்.

தனது தாயுடன் டன்சினன் காட்டில் கடந்த (05) விறகு தேட சென்ற போது யுவதி காணாமல் போனார்.

நுவரெலியா இராணுவத்தினர், நுவரெலியா பொலிஸ் மற்றும் டன்சினன் தோட்டத் தொழிலாளர்கள் காணாமல் போன யுவதியை ஐந்து நாட்களாக- 96 மணி நேர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நுவரெலியா சாந்திபுர பகுதியில் வசிப்பவர்கள் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது நுவரெலியா கிக்கிளியமான ரிசர்வ் பகுதியில் யுவதியின் உதவிக்குரல் கேட்டதையடுத்து, இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

5 நாட்களாக பட்டினியுடனிருந்த யுவதிக்கு கிராம மக்கள் உணவு மற்றும் பானம் கொடுத்து பின்னர் நுவரெலியா போலீசில் ஒப்படைக்கப்பட்டு, தற்போது நுவரெலியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்!

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்...

தரமற்ற நிலக்கரி ஊழலை விசாரிக்க கோரி போராட்டம்

தரமற்ற நிலக்கரி ஊழல் குறித்த தணிக்கை அறிக்கை மீது உடனடி விசாரணை...

லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு: அடுத்த வாரம் அமெரிக்காவில் கூட்டம்!

ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்குவதையும், "அமைதி உறவுகளை" ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு லெபனானுடன் நேரடிப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்