24.9 C
Jaffna
January 15, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

யாழில் நேற்று 204 பேருக்கு தொற்று: 6 மரணங்கள்!

யாழ் மாவட்டத்தில் நேற்று (9) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர், துரித அன்டிஜன் சோதனைகளில் 204 பேருக்கு தொற்று உறுதியானது. 6 மரணங்கள் பதிவாகின.

நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைகளில் 13 பேரும், துரித அன்டிஜன் சோதனையில் 191 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 8 பேர், நொதேர்ன் சென்ரல் வைத்தியசாலையில் ஒருவர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 2 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அன்டிஜன் சோதனையில், யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 37 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேர், மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேர், ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 35 பேர், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 பேர், தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகார பிரிவில் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொற்றுக்குள்ளானவர்களில், அல்வாய் பகுதியை சேர்ந்த 24 வயதான தாயும், 2 வயது மற்றும் 2 மாத வயதுடைய பெண்குழந்தைகளும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோனையில் தொற்று உறுதியானது.

மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொற்றுக்குள்ளானவர்களில், குடத்தனை கிழக்கை சேர்ந்த 2 மாத வயதுடைய குழந்தை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்டதில் தொற்று உறுதியானது.

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொற்றுக்குள்ளானவர்களில், கோண்டாவிலை சேர்ந்த 14, 16, 17 வயதான சகோதர, சகோதரிகள் யாழ் போதனா வைத்தியசாலையில் பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று உறுதியானது.

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொற்றுக்குள்ளானவர்களில், கோவிலாக்கண்டியை சேர்ந்த பெற்றோரும்  3 மகன்களும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நுணாவிலை சேர்ந்த 3 வயது, 11 மாதங்களுடைய சகோதரிகளும் உள்ளடங்குகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி விபரம்

Pagetamil

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர்: அமெரிக்காவின் புதிய மாநிலமாக இணைய ட்ரம்ப் அழைப்பு!

Pagetamil

முல்லைத்தீவில் கரையொதுங்கியவர்கள் உண்மையான அகதிகளா என ஆராய்கிறதாம் அனுர அரசு!

Pagetamil

முக்கிய தீர்மானங்கள் இல்லை… வழக்கம் போல கூடிக்கலைந்தது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

Pagetamil

அனுர ஜன.13- 17 வரை சீன விஜயம்!

Pagetamil

Leave a Comment