29.5 C
Jaffna
March 28, 2024
முக்கியச் செய்திகள்

623 பொருட்களின் இறக்குமதிக்கு உத்தரவாத தொகை அதிகரிப்பு!

அந்நிய செலாவணி விகிதத்தைப் பாதுகாக்கும் முகமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு 100% உத்தரவாத தொகையை செலுத்த வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்த முடிவு, நாணய மாற்று விகிதத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் வெளிநாட்டு நாணய சந்தை பணப்புழக்கத்தைப் பாதுகாப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த பட்டியலில்,

கையடக்க தொலைபேசிகள் மற்றும் நிலையான தொலைபேசிகள், மின்விசிறிகள், டிவி, குளிர்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், டிஜிட்டல் கமராக்கள், ஹீட்டர்கள் மற்றும் மின்அடுப்புகள், குழந்தைகளின் ஆடைகள், ஜெர்சி, இரவு ஆடைகள் மற்றும் பைஜாமாக்கள் போன்ற ஆடை மற்றும் பாகங்கள், சட்டைகள் மற்றும் பிளவுசுகள், டிராக் சூட் மற்றும் நீச்சலுடை, டி-ஷர்ட்கள், காலணிகள், கடிகாரங்கள், சன்கிளாஸ்கள் மற்றும் பிற பாகங்கள்.

வீட்டு மற்றும் தளபாடங்கள் பொருட்கள், ரப்பர் டயர்கள், ஏர் கண்டிஷனர்கள், புதிய ஆப்பிள்கள், திராட்சை, ஒரேஞ்சு மற்றும் உலர்ந்த பழங்கள், பழச்சாறுகள், அழகுசாதன பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் மற்றும் ஒப்பனை பொருட்கள், பியர், வைன் போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர், தானியங்கள் போன்ற பிற உணவுகள் மற்றும் பானங்கள் , ஸ்டார்ச், சாக்லேட்டுகள், சீஸ் மற்றும் வெண்ணெய், இசைக்கருவிகள், புகையிலை பொருட்கள், பொம்மைகள் மற்றும் எழுதுபொருட்கள் போன்ற உணவு அல்லாத பிற நுகர்பொருட்கள் உள்ளடங்குகின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: மைத்திரி இன்று சிஐடியில் வாக்குமூலம்!

Pagetamil

Leave a Comment