Pagetamil
முக்கியச் செய்திகள்

சிறிதரன் சொன்னது பிழையான தகவல்; வடமாகாணசபை குழப்பத்தின் பின்னணி என்ன?: விளக்குகிறார் சீ.வீ.கே!

கடந்த வடமாகாணசபையை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் அணி மாகாணசபை உறுப்பினர்கள் குழப்பிய விவகாரம் மீண்டும் சர்ச்சையாகியுள்ளது. அந்த அணியில் ஒருவராக, அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை தவறாக சித்தரித்து, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அண்மையில் நிகழ்ச்சியொன்றில் கருத்து தெரிவித்திருந்தார். அதை மறுத்துள்ளார் வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்.

இன்று யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப் பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் வடமாகாண சபையை குழப்புவதில் நிறைய அனுபவம் வாய்ந்த நானும் பாரிய கவனம் செலுத்தினேன் என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனைச் சில அச்சு ஊடகங்களிலும் செய்தியாக்கப்பட்டதால் உண்மை நிலையைத் தெளிவுபடுத்தல் மிக அவசியம் என்பதால் இந்த ஊடகச் சந்திப்பை கூட்டியிருக்கின்றேன்.

நான் செய்த தவறாக அவர் குறிப்பிட்டது 17 சபை உறுப்பினர்களுடன் சேர்ந்து மாகாண சபையை கலையுங்கள் என்ற கடிதத்தை ஆளுநரிடம் கையளித்தமை பற்றியது. இந்த விடயம் தொடர்பாக பல தெளிவுபடுத்தல்களை நான் கடந்த 5 வரு டங்களாக வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறேன்.

ஆளுநருக்குக் கொடுத்த கடிதம் முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லை என்பது மட் டுமே தவிர. சபையைக் கலையுங்கோ என்றல்ல என்பதை முதலில் குறிப்பிட விரும்புகின்றேன்.

முதலமைச்சர் அமைச்சர்களுக்கு எதிராக விசாரணைக் குழு ஒன்றை சபை நியமிக்க வேண்டும் என்ற முன்மொழிவைச் சமர்பித்தபோது இதன் பொருட்டு சபை உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக் குழுவை நியமிக்க முடியுமே தவிர, முதலமைச்சர் கோரியபடி வெளியாட்கள் கொண்ட குழுவை நியமிப்பதை நிராகரித்ததே நான்தான். முதலமைச்சர் தமக்குரிய சிறப்புரிமைக்கமைய அமைச்சர்களை நீக்கும்படி ஆளுநருக்கு சிபார்சு செய்யலாம் என்பதால் விசாரணைக்குழு தேவையற்றது என்பதே எமது நிலைப்பாடாக இருந்தது. அதனால் சுமார் ஒன்றரை நாள் விவாதத்தின் பின்பு முதலமைச்சர் தாமே ஒரு குழுவை நியமிக்கலாம் என்று நாம் கூறியதற்கு அமையவே விசாரணைக்குழு அவரால் நியமிக்கப்பபட்டது.

அந்த அறிக்கையை சபையில் சமர்ப்பித்த பின் நடைபெற்ற விவாதத்தின் முடிவில் திரு பொ.ஐங்கரநேசன் அவர்கள் தன்னிலை விளக்கம் அளித்த நிலையில் முதலமைச்சர் அதனையும் பரி சீலித்து அவரது முடிவை இரண்டு நாட்களின் பின்பு தெரிவிக்கலாம் என்ற எனது கோரிக்கையை நிராகரித்து தமது தீர்மானித்தை வாசிக்கத் தொடங்கியதும் அநேகமான மாகாண சபை உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறினர். இவ்வாறான நடவடிக்கை பற்றி எனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் பிற்பகல் 3 மணிக்கு கட்சித் தலைமையகத்தில் ஒரு கூட்டம் இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ளுமாறு எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கமைய நான் சபை அமர்வு முடிந்த பின்பு கட்சித் தலைமையத்துக்கு இரண்டு மணித்தியாலயங்களுக்கு பின்பு சென்றபொழுது அநேகமான உறுப்பினர்களும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஆளுநருக்குச் சமர்ப்பிதற்கான கடிதம் கணினியில் தட்டச்சிடப்பட்டுக் கொண்டிருந்தது. அது கட்சி உறுப்பினர்களின் முடிவு என எனக்குத் தெரிவிக்கப்பட் டது. அதில் எனது பெயர் முதலில் இருந்தபோது அப்படிப் போட வேண்டாம், அது தவறு என பலமுறை வற்புறுத்தியும் அதனை நிராகரித்து எனது பெயரை முதலில் தட்டச்சாக்கி விட்டார்கள். வேறு வழி யின்றி கையொப்பமிட நான் நிர்ப்பந்திக்கப்பட் டேன்.

இந்தக் கடிதத்தை ஆளுநரிடம் வழங்குவதற்கு என்னையும் அழைத்தார்கள். அப்படி நானும் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனும் எனது வாகனத்தில் புறப்படும்போது திரு.கமலேஸ்வவரன் அந்தக் கடிதக் கோவையை கொண்டு வந்து என்னிடம் தந்தார். அதை நான் ஏற்காமல் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தவர்களே கொடுக்க வேண்டும் எனக் கூறியதும் அவர் அதை எடுத்துச் சென்றார்.

பின்பு ஆளுநரைச் சந்திக்க மேல்மாடியில் உறுப்பினர்களும் ஊடகவியலாளர்களும் உட்சென்றபோது ஏற்பட்ட நெருக்கடிக்குள் அந்தக் கோவை எனது கையில் திணிக்கப் பட்டது. இதனால் நான் அதிர்ச்சியடைந்த போதும் அந்த இடத்தில் நின்று பிரச்சினைப் படுவதைத் தவிர்க்கும் பொருட்டு கடிதம் என்னால் ஆளுநரிடம் சகல உறுப்பினர்கள் முன்னிலையில் கையளிக்க வேண்டியதாயிற்று.

எனவே, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் முன்னெடுப்பிலோ வேறு விதத் திலோ எனக்கு எதுவித சம்பந்தமும் இல்லை என்பதை காணலாம். சகல உறுப்பினர்களும் சேர்ந்து கட்சி சார்ந்து கட்சித் தலைமையகத்தில் எடுத்த முடிவுக்கு எப்படி என்னைப் பொறுப்பாளி ஆக்கலாம்.

தாம் இது பற்றி “கட்சித் தலைவர் மாவை அண்ணையைக் கேட்டபோது இதைப் பற்றி தன்னுடன் கதைக்கவில்லை” என தம்மிடம் கூறியதாக சிறிதரன் கூறு கின்றார். இந்த சம்பவம் நடைபெற்றபோது திரு.மாவை சேனாதிராசா தலைமையகத்திலே இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இந்தக் கைங்கரியத்தை முன்னெடுத்தவர்கள் வேறு எங்கேயோ கூடித் தயாரித்த வரைபை அவரிடம் காட்டிய பின் மாற்றியமைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மேலும் ஆளுநர் அலுவலகத்தில் என்னைக் கடிதத்தைக் கொடுக்க வைத்த திட்ட மிட்ட சதி பற்றியும் இதில் நான் பலிகடாவாக்கப்பட்டமை பற்றியும் உடனடியாகவே கட்சித் தலைவரான மாவை சேனாதிராசா அவர்களுக்கு நேரடியாக எனது கவலை யைத் தெரிவித்த பின்பே நான் எனது இல்லம் திரும்பினேன். இதனை அவரிடமே ஊடகவியலாளர்கள் கேட்கலாம். அவரிடம் பேசிய பின்பே இந்த ஊடகவியலாளர் சந்திப்பை அழைத்தேன் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

ஆகவே, ஏதோ கட்சித் தலைவருக்குத் தெரியாமல் இந்தச் செயற்பாட்டை நான் முன் னெடுத்த மாதிரியான தொனிப்பபட சிறிதரன் கூறிய கருத்து தவறானதும் கவலையளிப்பதாகும். இது ஒரு தனிமனிதன் கையாண்ட விடயமல்ல. 17 சபை உறுப்பினர்கள் சேர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட விடயமாகும். உண்மையை மறைக்க முடியாது. திரு.மாவை சேனாதிராசா அப்படி உண்மையை மறைக்கக்கூடியவர் அல்ல.

நான் அவைத் தலைவர் மட்டும்தான் என்பதையும் நிர்வாக விடயத்தில் நேரடிப் பொறுப்பு எதுவும் கொண்டிருக்கவில்லை என்பது சாதாரண அறிவுக்கெட்டிய விடயம். மாகாண சபை நிர்வாகத்தை யார் யார் குழப்பினார்கள். எவற்றை எல்லாம் குழப்பி னார்கள். அவற்றின் பின்னணியில் யார் யார் இருந்தார்கள் என்ற நூற்றுக்கணக்கான விடயங்கள் எனக்குத் தெரியும். கட்சி நலன் கருதி நான் அவை பற்றி பொது வெளியில் பேசியதில்லை. அதனால் நான் பலவீனமானவன் எனறு யாரும் கருதக் கூடாது.

இப்பொழுது நடப்பது போல தமிழரசுக் கட்சிக்குள் தன்பக்க கோல் அடிக்கும் (same side goal) செயல்பாடு இல்லாத வரலாற்றினூடாக வந்தவன் நான்.

“ஊக்கமுடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்கு பேருந்தகைத்து” என்றார் வள்ளுவர்.

தேவைப்படும் போது அவை பற்றி பேசுவேன். 50 வருடத்திற்கு மேலான அரசியல் மற்றும் மக்கள் சேவை அனுபவமும் 20 வருடத்துக்கு மேலான தேர்தல்களைச் சந் தித்த அனுபவமும் எனக்குண்டு என்பதை நான் கூறியாக வேண்டும் என்றார்.

வடமாகாணசபை முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கனடாவிலுள்ள தமிழ் அரசு கட்சி ஓய்வுபெற்றவர்களால் பின்னணியில் இயக்கப்பட்டு, அப்போதைய உறுப்பினர்கள் அயூப் அஸ்மின், கே.சயந்தன், இ.ஆர்னோல்ட் போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்டமையும், அவர்களை எம்.ஏ.சுமந்திரன் வலுவாக ஆதரித்ததாகவும் அப்போது செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

முன்னர் ஒன்றாக வந்தீர்கள்… இப்போது மூன்றாக வந்துள்ளீர்கள்; தமிழர்களுக்கிடையிலானதே மீனவர் பிரச்சினை: மோடி- தமிழ் கட்சிகள் சந்திப்பில் பேசப்பட்டவை!

Pagetamil

இலங்கை- இந்தியாவுக்கிடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

Pagetamil

நரேந்திர மோடிக்கு பெரும் வரவேற்பு!

Pagetamil

‘என் மனைவியை தொட்டால்…’: ஜனாதிபதி அனுரவை எச்சரித்த மஹிந்தவின் சகா!

Pagetamil

Update: புதிய வாகன பதிவுகளுக்கு மட்டுமே வரி அடையாள எண் தேவை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!