இராஜாங்க அமைச்சர் பதவியை விரைவில் துறந்து, இலங்கை மத்திய வங்கி ஆளுனர் பொறுப்பை ஏற்கவுள்ள அஜித் நிவார்ட் கப்ரால், அமைச்சரவை அந்தஸ்துடன் ஆளுனர் பதவியை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனா, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளின் மத்திய வங்கி ஆளுனர்கள், அமைச்சரவை அந்தஸ்திற்கு இணையானவர்கள். இதேபோன்ற மத்திய வங்கி ஆளுனர் பதவியை அவர் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரைப் போன்ற அதிகாரத்தை- பேச்சுவார்த்தைகளில் பணம் மற்றும் மூலதனச் சந்தைகளில் முடிவுகளை எடுப்பதற்கு தடையில்லாமல் அதிகாரத்தை நாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நிதி, மூலதன சந்தைகள் மற்றும் பொது நிறுவன சீர்திருத்தங்கள் இராஜாங்க அமைச்சராக பணியாற்றுகிறார். அவர் விரைவில் அந்த பொறுப்பிலிருந்து விலகி, மத்திய வங்கி ஆளுனர் பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது