26.2 C
Jaffna
January 22, 2025
Pagetamil
மருத்துவம்

ஆணுறுப்பின் அளவினால் தலையிடியா?: மருத்துவம் சொல்வது என்ன?

பெற்றோரிடமோ, உடன்பிறந்தவர்களிடமோ, நெருங்கிய நண்பர்களிடமோ கூட சொல்ல முடியாமல் ஆணுலகம் தவிக்கிற ஒரு முக்கியமான பிரச்னை ஆணுறுப்பின் அளவு பற்றிது.

“இது உண்மையில் ஒரு பிரச்னையே இல்லை. இல்லாத பிரச்னையை மிகைப்படுத்தி அவர்களே அவர்களை வருத்திக்கொள்கிறார்கள்” என்ற பாலியல் மருத்துவர் கார்த்திக் குணசேகரன் இதுபற்றி விரிவாகப் பேசினார்.

“வெளிநாட்டுல ஆணுறுப்பு நீளம் தொடர்பான ஆராய்ச்சி ஒண்ணு நடந்துச்சு. அதுல கலந்துக்கிட்ட அத்தனை ஆண்கள்கிட்டேயும் `உங்க உறுப்பு சின்னதா இருக்கிறதா எப்பவாவது ஃபீல் பண்ணியிருக்கீங்களா’ன்னு ஒரு கேள்வி கேட்கப்பட, பத்துல எட்டு பேர் `ஆமா, எங்களோட உறுப்பு சின்னதாக இருக்கிறதா ஃபீல் பண்றோம்’னு சொல்லியிருக்காங்க. ஆண்களுக்கு அவங்களோட உறுப்பு பத்தி இருக்கிற தாழ்வு மனப்பான்மையைப் புரிய வைக்கிறதுக்காக இந்த ஆராய்ச்சி பத்தி சொல்லியிருக்கேன். மத்தபடி, பத்துல 8 பேருக்கு இப்படி இருக்கிறதுக்கு வாய்ப்பே கிடையாது.

தன் உறுப்போட அளவு பத்தி வருத்தப்படுறது கிட்டத்தட்ட எல்லா நாட்டு ஆண்கள்கிட்டேயும் இருக்கு. ஆணுறுப்போட அளவு நாடுகளைப் பொறுத்து மாறுபடும். உதாரணத்துக்கு, ஜப்பான் நாட்டு ஆண்களோட உறுப்பின் சராசரி அளவு 4 இன்ச்சிலிருந்து 4.5 இன்ச் வரை இருக்கும். இந்தியா, இலங்கையில 5 முதல் 5.5 இன்ச் வரைக்கும் ஓகே. `எனக்கு 4.8 இன்ச்தான் இருக்கு’ன்னாலும் சாதாரணம்தான். இந்த அளவுக்குள்ளேயே இந்தியா, இலங்கையில இருக்கிற 90 சதவிகித ஆண்கள் வந்திடுவாங்க. இந்த உண்மை தெரியாமதான் பல ஆண்களும் `என் ஆணுறுப்பு சின்னதா இருக்கு டாக்டர். கல்யாணம் பண்ணிக்க பயமா இருக்கு டாக்டர்’னு பதற்றப்படுறாங்க.

ஆண் பிள்ளைங்க சின்ன வயசுல `எனக்கு பெருசா இருக்கு; உனக்கு ஏன்டா சின்னதா இருக்கு’ன்னு ஒருத்தருக்கொருத்தர் கலாட்டா பண்ணிக்கிறது மனசுல பதிஞ்சுட்டாலும், பின்னாள்ல `ஆமா, எனக்கு சின்னதாதான் இருக்கு’ன்னு நம்ப ஆரம்பிச்சிடுவாங்க. பிள்ளைங்க இப்படிப் பேசுறதை கண்டிக்கிறதைவிட, வயசுக்கேற்ற வளர்ச்சி பிள்ளைகளோட ஆணுறுப்புல இருக்காங்கிறதைச் தெரிஞ்சுக்கிறது முக்கியம். இந்தக் கடமை அப்பாக்களுக்கு அவசியம் இருக்கணும். சிங்கிள் பேரன்ட்டா இருந்தா அம்மா செய்யட்டும். அபூர்வமா ஒருசில ஆண் குழந்தைகளுக்கு ஹார்மோன் குறைபாடு காரணமா ஆணுறுப்பு வளர்ச்சி குறைவா இருக்கும். இதை 10 வயதுக்குள்ளேயே கண்டுபிடிச்சிட்டா ஹார்மோன் சிகிச்சை கொடுத்து சரி செஞ்சுடலாம்.

பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் ஆரம்பிக்கிற வயசு எப்படி ஒவ்வொருத்தருக்கும் மாறுபடுதோ, அதே மாதிரி ஆண் குழந்தைகளுக்கும் மாறுபடும். `நான் 15 வயசுல பெரிய மனுஷியானேன். என் பொண்ணும் அப்படித்தான் ஆவாள்னு நினைக்கிறேன்’ என்று அம்மாக்கள் சொல்றதைக் கேட்டு வளர்ற வாய்ப்பு பெண் குழந்தைகளுக்குக் கிடைக்கும். அதனால, தன் கூட படிக்கிற பொண்ணுங்க பெரிய மனுஷியானது தெரியவரும் போதும், `அம்மா சொல்ற மாதிரி நான் லேட்டா வருவேன்போல’ன்னு புரிஞ்சுக்க வாய்ப்பிருக்கு.

ஆனா, ஆண் குழந்தைங்களுக்கு இந்த வாய்ப்பு நம்ம வீடுகள்ல பெரும்பாலும் கிடைக்கிறதில்லை. ஓர் ஆண் குழந்தைக்கு பியூபர்ட்டி 13 வயசுல வரலாம். அப்போ, அவன் ஆணுறுப்புல 15 வயசுலேயே வளர்ச்சி இருக்கும். கொஞ்சம் தாமதமா பியூபர்ட்டி வர்ற ஆண் குழந்தைகளுக்கு அதன் பிறகு உடல் வளர்ச்சியும் ஆணுறுப்பு வளர்ச்சியும் வரும். இதையும் அப்பாக்கள்தான் ஆண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கணும். வாய்ப்பில்லைன்னா அம்மாக்களும் சொல்லித்தரலாம்.

ஆணுறுப்பைப் பொறுத்தவரைக்கும் `Shower penis’, ‘Grower penis’னு இரண்டு வகைகள் இருக்கு. சிலருக்கு விறைப்புத்தன்மை அடையாத நிலையிலேயே பெருசா இருக்கும். அவங்களுக்கு விறைப்புத்தன்மை வந்தாலும் அளவுல பெரிய வித்தியாசம் தெரியாது. இது `Shower penis’. சிலருக்கு விறைப்படையாத நிலைமையில் சிறியதா இருக்கும். விறைப்படைஞ்ச பிறகு சாதாரண அளவுக்கு வந்துடும். இது `Grower penis’. அதாவது, விறைப்படையுறப்போ ரெண்டு பேருக்கும் கிட்டத்தட்ட ஒரே அளவுல வந்திடும். ஆனா, `அவனுக்கு விறைப்படையறதுக்கு முன்னாடியே பெருசா இருக்கேன்’னு ஓர் ஆணும், `விறைப்படைஞ்ச பிறகும் பெருசா வித்தியாசம் தெரியலையேன்’னு இன்னோர் ஆணும் பயந்திட்டிருப்பான். ஆபாசப் படங்களும் ஆணுறுப்பு தொடர்பா நண்பர்களுடனான உரையாடல்களும்தான் மேலே சொன்ன பிரச்னைக்கு பெரும்பாலும் காரணம். ஆபாசப் படங்கள்ல பெருசா தெரியறதுக்கு செயற்கையா ஏதாவது செய்யலாம். இல்லைன்னா நீளமா தெரியுற ஆங்கிள்ல கமரா கோணத்தை வைக்கலாம். நண்பர்களைப் பொறுத்தவரைக்கும் இமேஜ் பில்டப்புக்காக தன்னோட ஆணுறுப்போட நீளத்தை பெருசா சொல்லலாம். இதெல்லாம் தெரியாம, சில ஆண்கள் கல்யாணத்தைத் தள்ளிப்போடுறாங்க; சிலர் கல்யாணம் செஞ்சுக்கவே பயப்படுறாங்க.

பத்து வருடங்களுக்கு முன்னாடி வரைக்கும் பெரும்பான்மை பெண்களுக்கு, அவங்களோட கணவரே `என் உறுப்பு சின்னதா இருக்கோ’ன்னு சொன்னாதான் தெரியும். இப்போ இருக்கிற பெண்களுக்கு இதுபற்றிய நாலெட்ஜ் இருக்கு. இருந்தாலுமே, பெண்களோட சிறிய மார்பகங்களை ஆண்கள் விமர்சிக்கிற அளவுக்கு, ஆண்களோட உறுப்பை பத்தி பெரும்பான்மை ஆசிய பெண்கள் விமர்சிக்கிறதில்லை.

சரி, ஆணுறுப்பின் சரியான நீளத்தை எப்படி அளவிடுவது?

“சிலருக்கு ஆணுறுப்பு வளர ஆரம்பிக்கிற இடத்தில் கொழுப்பு அதிகமா இருக்கும். இந்தக் கொழுப்பே சிலருக்கு 2 இன்ச் அளவுக்கு இருக்கும். இது தெரியாம அந்தக் கொழுப்புக்கு கீழே இருந்து அளந்தா, ஆணுறுப்பு 2 அல்லது 3 இன்ச்தான் இருக்கும். இதுவே ஆணுறுப்பு ஆரம்பிக்கிற கொழுப்புப் பகுதியிலிருந்து அளந்து பார்த்தா 5 இன்ச் வரைக்கும் இருக்கும். நமது ஆண்களுக்கு இது சாதாரணம்தான். இன்னும் தெளிவா சொல்லணும்னா, ஆணுறுப்பின் மேலே முடி வளர ஆரம்பிக்கிற இடத்தை அழுத்தினா ஓர் எலும்பு விரலில் தட்டுப்பட்டும். அந்த எலும்பிலிருந்துதான் ஆணுறுப்பு தொடங்குது. இங்கிருந்துதான் அளக்கணும்.

இப்படி அளக்கிறதுக்கு எனக்குத் தெரியலை டாக்டர்னு சொன்னீங்கன்னா, `மிரரிங் டெக்னிக்’னு இன்னொரு வழியில உங்க உறுப்போட சரியான நீளத்தைத் தெரிஞ்சுக்கலாம். உறுப்பு மேல இருக்கிற ரோமங்களை அகற்றிட்டு கண்ணாடியில உங்க ஆணுறுப்பைப் பாருங்க. உண்மையான நீளத்தை நீங்களே கண்டுபிடிச்சிடலாம். `சின்னதா இருக்கோ’ன்னு நினைச்சிட்டிருக்கிற அத்தனை ஆண்களும் மிரரிங் டெக்னிக் செய்யுங்க. தன்னம்பிக்கை கொள்ளுங்க. மனசுக்குப் பிடிச்ச, உங்களை விரும்புற பெண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு தாம்பத்திய மகிழ்ச்சியை அனுபவியுங்க.

இதேவேளை, ஆண்களிடம் உள்ள இன்னொரு சந்தேகம், எனக்கு விதைப்பை ஒன்றுதான் உள்ளது. என்னால் உடலுறவுகொள்ள முடியுமா, எனக்கு குழந்தை பிறக்குமா டாக்டர் என சிலர் கேட்பார்கள்.

உண்மையில், `உடலுறவு கொள்வதற்கும் குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் ஒரு விதைப்பை போதும். தைரியமாக இருங்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

Leave a Comment