Pagetamil
கிழக்கு

350 மூடை யூரியா மீட்பு!

350 மூடைகள் யூரியா உள்ளிட்ட உர மூடைகளை அத்தியாவசிய சேவைகள் என்ற பெயர் பலகை இடப்பட்ட லொறி ஒன்றில் கடத்திய இருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை (07) மாலை அம்பாறை பொலிஸ் விசேட பிரிவின் புலனாய்வு தகவலுக்கமைய சம்மாந்துறை பொலிஸார் பசளைகளை கடத்தி சென்ற இருவரை கைது செய்ததுடன் லொறியுடனான 350 உர மூடைகளையும் மீட்டுள்ளனர்.

எம்பிலிப்பிட்டிய பல்லேகம பிரதேசத்தில் இருந்து அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேசத்த்திற்கு எடுத்து செல்லப்பட்ட 350 உர மூடைகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.இதன் போது லொறியில் பயணம் செய்த சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 350 உர மூடைகளையும் லொறியையும் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட யூரியா உள்ளிட்ட உர வகைகள் லொறி மற்றும் கைது செய்யப்பட்ட இருவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

-பா.டிலான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

தூக்கில் தொங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டது!

Pagetamil

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்

Pagetamil

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு வரிசை

Pagetamil

கொம்மாதுறையில் யானைத்தாக்குதலில் ஆசிரியர் வீடு பெரும் சேதம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!