வவுனியாவில் நடமாடும் சேவை மற்றும் 24 கொரோனா தடுப்பூசி மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தும் பணிகள் இன்று இடம்பெற்றது.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம், நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம் உட்பட 24 மத்திய நிலையங்களிலும், நடமாடும் சேவையின் ஊடாகவும் காலை 9 முதல் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதில் 60 வயதிற்கு மேற்ப்பட்ட முதியவர்கள் சென்று கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸினை பெற்றுச்சென்றனர்.
வவுனியா மாவட்டத்தில் இரண்டாம ;கட்ட கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக கொழும்பில் இருந்து 81 ஆயிரம் சினோபாம் தடுப்பூசிகள் நேற்றுமுன்தினம் வவுனியாவிற்கு வழங்கப்பட்டிருந்தது.
குறித்த பணியில் சுகாதாரத்துறையினர், இராணுவத்தினர் ஈடுபட்டுவருவதோடு, 12,000 வரையானவர்களிற்கு இரண்டாவது தடுப்பூசியினை போட எதிர்பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.