சேலையில் கட்டப்பட்ட ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்த போது, 11 வயது சிறுமியொருவர், கழுத்து இறுகி பலியான சம்பவம் தெரணியகலை- மாலிபொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கெரோனிடா தில்மினி என்ற 11 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி,தனது 9 மற்றும் 7 வயதான சகோதரர்களுடன் படுக்கையறையில் கட்டப்பட்ட ஊஞ்சலில் விளையாடியுள்ளார்..
சிறுமியின் தந்தை மாலிபொட தோட்டத்துக்கு வேலைக்குச் சென்றிருந்ததுடன், அவரது தாய் சமையலில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளார்.
சமையல் வேலைகளை முடித்த தாயார், சிறுவர்கள் விளையாடிய அறைப் பக்கம் சென்ற போது, அறையின் கதவு உள்ளே தாழ்ப்பாள் இடப்பட்டிருந்ததை அவதானித்து, யன்னல் வழியே உள்ளே பார்த்துள்ளார்.
இதன்போது, தனது மகள் ஊஞ்சலில் இறுகிய நிலையில் இருந்ததை அவதானித்து, அயலவர்களின் உதவியுடன் சிறுமியை மீட்டு, தெரணியகல வைத்தியசாலையில் அனுமதித்த போது, சிறுமி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை தெரணியகல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்