கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் வழிகாட்டலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீரின் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை, நுளம்பு கள தடுப்பு பிரிவினர், பாதுகாப்பு படையினர் இணைந்து கொவிட்-19 தடுப்பூசி இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நிகழ்வுகள் 04 நிலையங்களில் காரைதீவில் நடைபெற்றது.
30 தொடக்கம் 60 வயது வரையானவர்களுக்கு வழங்கப்பட்ட கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் இந்த நிகழ்வில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 1081 பேர் இன்று தடுப்பூசியினை பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்தும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி, காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலயம், மாவடிப்பள்ளி அல்- அஸ்ரப் மகா வித்தியாலயம் போன்ற இடங்களில் தொடர்ந்தும் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர் தெரிவித்தார்.