26 C
Jaffna
January 8, 2025
Pagetamil
கிழக்கு

டயர் வெடித்து கவிழ்ந்த லொறி: வீதியில் சிதறிய தார்ப்பூசணி!

கல்முனை பாண்டிருப்பு பிரதேசத்தில் இன்று இரவு 07.15 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வாகனத்தில் பயணித்த இருவரும் அதிஷ்டவசமாக தப்பிக்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட ஓட்டமாவடி பிரதேசத்திலிருந்து அக்கரைப்பற்றை நோக்கி ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1720 கிலோ கிராம் தார் பூசணிக்காயை ஏற்றிக்கொண்டு வந்த லொறியே இந்த விபத்தில் சிக்கியது. பின்பக்க டயர் வெடித்தமையே விபத்துக்கான காரணம் என அறியப்பட்டுள்ளது.

ஸ்தலத்திற்கு விரைந்த கல்முனை போக்குவரத்து பொலிஸார் வாகனப் போக்குவரத்தை நிறுத்தி பிரதேச மக்கள் மற்றும் பயணிகளின் உதவியுடன் கவிழ்ந்து கிடந்த லொறியே நிமித்தினர். சுமார் 20 நிமிடம் அளவில் வேகமாக செயற்பட்ட பிரதேசவாசிகள் குறித்த லொறியையும், வீதியில் விழுந்து கிடந்த தார் பூசணியையும் மீட்டனர். இருந்த போதிலும் சுமார் 200 கிலோ அளவில் சேதமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வாழைச்சேனையில் கசிப்பு வேட்டை

Pagetamil

கிழக்கு மாகாண சுற்றுலா துறையை மேம்படுத்த முயற்சி

east tamil

திருகோணமலையில் சதுப்புநிலங்கள் பாதுகாத்தல் தொடர்பான செயலமர்வு

east tamil

மட்டக்களப்பின் சுற்றுலா துறையை வலுப்படுத்தும் பணிகள் ஆரம்பம்

east tamil

கேரளா கஞ்சாவுடன் 34 வயதுடைய சந்தேக நபர் கைது

Pagetamil

Leave a Comment