26.5 C
Jaffna
January 9, 2025
Pagetamil
இலங்கை

சேலை ஊஞ்சலில் கழுத்து இறுகி 11 வயது சிறுமி பலி!

சேலையில்‌ கட்டப்பட்ட ஊஞ்சலில்‌ விளையாடிக்கொண்டிருந்த போது, 11 வயது சிறுமியொருவர்‌, கழுத்து இறுகி பலியான சம்பவம்‌ தெரணியகலை- மாலிபொட பிரதேசத்தில்‌ இடம்பெற்றுள்ளது.

கெரோனிடா தில்மினி என்ற 11 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்‌.

குறித்த சிறுமி,தனது 9 மற்றும்‌ 7 வயதான சகோதரர்களுடன்‌ படுக்கையறையில்‌ கட்டப்பட்ட ஊஞ்சலில்‌ விளையாடியுள்ளார்‌..

சிறுமியின்‌ தந்தை மாலிபொட தோட்டத்துக்கு வேலைக்குச்‌ சென்றிருந்ததுடன்‌, அவரது தாய்‌ சமையலில்‌ ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளார்‌.

சமையல்‌ வேலைகளை முடித்த தாயார், சிறுவர்கள்‌ விளையாடிய அறைப்‌ பக்கம்‌ சென்ற போது, அறையின்‌ கதவு உள்ளே தாழ்ப்பாள்‌ இடப்பட்டிருந்ததை அவதானித்து, யன்னல்‌ வழியே உள்ளே பார்த்துள்ளார்‌.

இதன்போது, தனது மகள்‌ ஊஞ்சலில்‌ இறுகிய நிலையில்‌ இருந்ததை அவதானித்து, அயலவர்களின்‌ உதவியுடன்‌ சிறுமியை மீட்டு, தெரணியகல வைத்தியசாலையில்‌ அனுமதித்த போது, சிறுமி உயிரிழந்துள்ளார்‌.

இந்தச்‌ சம்பவம்‌ தொடர்பான விசாரணைகளை தெரணியகல பொலிஸார்‌ முன்னெடுத்து வருகின்றனர்‌

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இஸ்ரேலுக்கு அனுமதி இல்லை: பிரதமர் ஹரிணி

east tamil

இலங்கை-இந்தியா இணைப்பு பாலம்: நவீனத்துவத்தின் தொடக்கம்

east tamil

சீன வைரஸ் பரவல்: இலங்கை அரசு மிகுந்த விழிப்புடன் உள்ளது – சுகாதார அமைச்சு

east tamil

இரண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு

east tamil

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது

east tamil

Leave a Comment