நுவரெலியா, டன்சினன் தோட்டத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் 25 வயது யுவதியொருவர் காணாமல் போயுள்ளார். தனது தாயாருடன் விறகு வெட்ட சென்ற சமயத்தில் அவர் காணாமல் போயுள்ளார்.
நேற்று காலை தனது தாயுடன் விறகு வெட்ட சென்ற யுவதி, தாயாரை உட்கார வைத்து விட்டு விறகு தேடி சென்றுள்ளார். தாய் மதியம் 2 மணி வரை காத்திருந்த தாயார், மகளை காணாததையடுத்து, அயலவர்களிற்கு தகவல் கொடுத்து அந்த பகுதி முழுவதும் தேடுதல் நடத்தியுள்ளனர். எனினும், யுவதியை காணவில்லை.
காணாமல் போன யுவதி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்.
இராணுவம், பொலிஸார் மற்றும் டன்சினன் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து யுவதியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1