Pagetamil
இலங்கை

கரவெட்டி பிரதேசசபை வாயிலில் தம்பதியினர் போராட்டம்!

பக்கத்து வீட்டாரது மூன்றுமாடி வீட்டுக் கட்டிடத்தால் தமது வீட்டிற்கு பாதிப்பு என்று கூறி வடமராட்சி நெல்லியடி கிழக்கு ராணி மில் வீதியை சேர்ந்த தம்பதியர் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை வாசலில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த மூன்றாம் மாதம் ஆரம்பிக்கப்பட்ட வீடு தமக்கு பாதிப்பு என்று குறிப்பிட்டு குறித்த பிரதேச சபையில் முறைப்பாடு செய்யப்பட்டும் இதுவரை எந்தவிமான நடவடிக்கைகளும் சரியாக மேற்கொள்ளாத நிலையிலேயே இன்று குறித்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் தாம் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து பிற்பகல் 12:30 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த நெல்லியடி போலீசார் குறித்த போராட்டக்காரர் மற்றும் கரவெட்டி பிரதேச சபை செயலாளர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடாத்தி குறித்த சட்டவிரோதமான கட்டிடத்தை அமைப்பவருக்கு எதிராக தாம் தமது சபை சட்டத்தரணி ஊடாக வழக்கு தாக்கல் செய்வதாக உறுதிமொழி வழங்கியதன் பிரகாரம் குறித்த போராட்டம் நிறைவிற்கு கொண்டுவரப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கரவெட்டி பிரதேசசபை தவிசாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது,  “கடந்த 3 மாதங்களாக தனிப்பட்ட காரணங்களினால் சபைக்கு வர முடியவில்லை. இன்று காலையில் சபைக்கு வந்த போது வாயிலில் தம்பதியினர் உட்கார்ந்திருந்தனர். ஏன் இருக்கிறீர்கள் என கேட்ட போது, எம்மை கதைக்க விடாமல் டான் தொலைக்காட்சி செய்தியாளர் என கூறிக்கொண்டு ஒருவர் புகுந்து படம்பிடித்தார். அவரை படம் பிடிக்க வேண்டாமென கேட்டபோது அவர் முரண்பட்டார்.

அந்த தம்பதியினரின் பிரச்சனையை கேட்ட போது, அருகிலுள்ள சட்டவிரோத கட்டுமானம் பற்றி தெரிவித்தனர். அந்த  வீடு கட்ட தொடங்கிய போது பிரதேசசபையின் அனுமதி பெறப்பட்டது. ஆனால் தற்போது, அதை மீறி கட்டுமானம் நடந்து வருகிறது. அதை நிறுத்துமாறு 3 முறை கடிதம் அனுப்பி விட்டோம். அவர்கள் நிறுத்த வில்லை. இதனால் அவர்கள் மீது வழக்க தொடரவுள்ளோம்.

இதேவேளை, இன்று போராட்டத்தில் ஈடுபடுபவர்களும் சட்டவிரோத கட்டுமானத்தையே அமைத்துள்ளனர். அவர்களிற்கு எதிராகவும் வழக்கு தொடர்வோம். இரண்டு சட்டவிரோத கட்டுமானங்களையும் இடிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டால், இரண்டு வீடுகளையும் இடிப்போம்“ என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் இடையிலான முக்கிய சந்திப்பு

east tamil

தூய்மையான இலங்கைக்கு வழிகாட்டும் பாராளுமன்றக் கலந்துரையாடல் விரைவில்!

east tamil

வடமத்திய மாகாணத்தில் தேர்வு தாள்கள் கசிவு – ஆசிரியர் பணி இடை நீக்கம்

east tamil

மியன்மார் அகதிகள் 12 பேர் விடுதலை

east tamil

தரம் 5 புலமைப்பரிசில் விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்!

Pagetamil

Leave a Comment