முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸூடனான தனது உறவை, பாலிவுட் நடிகை கிம் சர்மா உறுதி செய்துள்ளார்.
கிம் மற்றும் பயஸ் உறவு பற்றிய வதந்திகள் நீண்ட காலமாக பரவி வருகின்றன. எனினும், இருவரும் அது பற்றி பேசாமல் இருந்தனர்.
இந்த நிலையில், கிம் சர்மா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட ஒரு படத்துடன் தனது உறவின் நிலையை உறுதிப்படுத்தி ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பயஸூடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கிம் சர்மா வெளியிட்டுள்ளார்.
41 வயதான நடிகை கிம் சர்மா, முன்பு நடிகர் ஹர்ஷவர்தன் ரானேவுடன் உறவிலிருந்தார். பின்னர் அவர்கள் பிரிந்தனர். பயஸ் முன்பு மொடல் ரியா பிள்ளையை மணந்தார். இருவருக்குமிடையிலான கருத்து வேறுபாட்டையடுத்து விவாகரத்து செய்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1