Pagetamil
முக்கியச் செய்திகள்

தமிழ் அரசு கட்சியிலிருந்து 2 வேறுபட்ட ஆவணங்கள்; இம்முறை ஐ.நாவிற்கு தமிழ் தரப்பிலிருந்து 4 ஆவணங்கள் செல்கிறது!

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை தமிழ் அரசு கட்சி அனுப்பும் கடிதத்தில் கையெழுத்திடுவதில்லை என அந்த கட்சியின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

நேற்று இரவு சூம் வழியாக கலந்துரையாடலில் ஈடுபட்ட தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன் ஆகியோர் இந்த முடிவை எடுத்தனர்.

“த.கலையரசன் தேசியப்பட்டியல் உறுப்பினர். அதனால் கட்சி தலைமை கடுமையாக கூறினால் அவர் கையெழுத்திட்டாலும், ஏனைய இருவரும் கையெழுத்திட மாட்டார்கள்“ என தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தார்.

அத்துடன், சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன் ஆகியோரின் கையொப்பத்துடன் தனியான வரைபு ஒன்றை ஐ.நாவிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஆவணம் தயாரிக்கப்பட்டு, அதில் சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

இதனால் தமிழ் அரசு கட்சி சார்பிலேயே இரண்டு ஆவணங்கள் அனுப்பப்படும் சூழல் எழுந்துள்ளது.

இதேவேளை, 5 தமிழ் அரசியல் கட்சிகள் கையொப்பமிட்ட கடிதம் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. க.வி.விக்னேஸ்வரன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், வினோ நோகராதலிங்கம் ஆகிய 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுரேஷ் பிரேமச்சந்திரன், என்.சிறிகாந்தா ஆகிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதுதவிர, தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தனியாக ஒரு ஆவணத்தை அனுப்ப தீர்மானித்துள்ளது.

 

இதையும் படியுங்கள்

முன்னர் ஒன்றாக வந்தீர்கள்… இப்போது மூன்றாக வந்துள்ளீர்கள்; தமிழர்களுக்கிடையிலானதே மீனவர் பிரச்சினை: மோடி- தமிழ் கட்சிகள் சந்திப்பில் பேசப்பட்டவை!

Pagetamil

இலங்கை- இந்தியாவுக்கிடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

Pagetamil

நரேந்திர மோடிக்கு பெரும் வரவேற்பு!

Pagetamil

‘என் மனைவியை தொட்டால்…’: ஜனாதிபதி அனுரவை எச்சரித்த மஹிந்தவின் சகா!

Pagetamil

Update: புதிய வாகன பதிவுகளுக்கு மட்டுமே வரி அடையாள எண் தேவை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!