29.2 C
Jaffna
April 11, 2025
Pagetamil
குற்றம்

காதலி வீட்டிலிருந்து வரும் போது குறிவைக்கப்பட்ட பிரபல தாதா சன்ஷைன் சுத்தா!

மாத்தறை கொட்டவில பகுதியில், பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘சன்ஷைன் சுத்தா’ என்ற அமில பிரசன்னா ஹெட்டிஹேவ சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் தனது காதலி வீட்டுக்கு சென்று வருவதை அவதானித்து, அந்த வழியிலேயே சுடப்பட்டுள்ளார்.

பாதாள உலகத்தின் கோட்பாதர் என்று அழைக்கப்படும் மாகந்துரே மதுஷின் முதன்மை சீடர் என்று கூறப்படும் ‘சன்ஷைன் சுத்தா’ வெள்ளிக்கிழமை (03) மாத்தறை கொட்டவிலில் ரி -56 துப்பாக்கியால் அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காதலி வீட்டிற்கு சென்றுவிட்டு, கருப்பு வாகனமொன்றில் திரும்பிக் கொண்டிருந்த போதே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

31 வயதான சன்ஷைன் சுத்தா, மாத்தறை மிரிஸ்ஸ பகுதியில் வசிக்கிறார. ஒரு ஹோட்டல் உரிமையாளர் மற்றும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளார். அவர் போதைப்பொருள் வர்த்தகராகவும் அறியப்பட்டுள்ளார்.

தென் மாகாணத்தின் மற்றொரு முன்னணி போதைப்பொருள் விற்பனையாளரான ‘ஹரக் கட்டா’ தலைமையிலான ஆயுதக் கும்பலால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

ஹரக் கட்டா தற்போது துபாயில் தலைமறைவாக உள்ளார். அங்கிருந்து அவர் இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்தலை நடத்தி வருகிறார்.

‘சன்ஷைன் சுத்தா’ நீண்ட காலமாக மாகந்துரே மதுஷுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். துபாயில் அவர் நடத்திய விருந்திலும் கலந்து கொண்டிருந்தார். அந்த விருந்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் டுபாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். சன்ஷைன் சுத்தாவும் துபாய் போலீசாரால் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் இருந்தார்.

பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

சன்ஷைன் சுத்தா மாத்தறை கொட்டாவில பகுதியில் ஒரு பெண்ணுடன் உறவு வைத்துள்ளார். அவர் நேற்று முன்தினம் காலை காதலி வீட்டிற்கு வந்தார். சில மணி நேரம் கழித்து, மதிய உணவுப் பொதியுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

சன்ஷைன் சுத்தாவின் வாகனம் வீதியில் சென்று கொண்டிருந்த போது, ஆயுதக் குழு ரி -56 துப்பாக்கிகளால் தாக்கியது.

அப்போது, ​​வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதியது.

தாக்குதலில் கொல்லப்பட்ட சன்ஷைன் சுத்தாவின் சடலத்தின் மாதிரியை சோதனையிட்டதில் கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்

3வது காதலா?: 2வது காதலனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் நிகழ்ந்த விபரீதம்!

Pagetamil

15 வயது சிறுமியின் கழுத்தில் கத்தி வைத்து பாலியல் பலாத்காரம்

Pagetamil

தொலைபேசியில் அறிமுகமான 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய நடத்துனர் கைது!

Pagetamil

யாழில் பயங்கர ரௌடிகள் கைது!

Pagetamil

14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்: 17 முதல் 71 வயது வரையான 4 பேர் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!