29.6 C
Jaffna
March 4, 2025
Pagetamil
உலகம்

ஒரு வருடத்திற்கு கற்பை ஏலம்விட்ட 18 வயது பெண்!

சுவிட்சர்லாந்தில் இளம் பெண் ஒருவர் தமது கற்பை 460,800 யூரோவிற்கு ஏலம் விட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவைச் சேர்ந்த 18 வயதான அந்த இளம் பெண், தன்னை எக்லோசியா என அறிமுகப்படுத்தியுள்ளார்.

எஸ்கார்ட் தனியார் இணைய பக்கத்தில் தமது கற்பை 500,000 பிராங்குகள் (460,800 யூரோ) தொகைக்கு ஏலத்தில் வைத்துள்ளார். ஆனால் இந்த கட்டணம் இறுதியானது எனவும் அவர் குறித்த இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

18 வயதேயான குறித்த இளம் பெண், தாம் ஒரு விலைமாதாக வேண்டும் எனவும், அதனால் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பலன்பெற வேண்டும் எனவும் திட்டமிடுவதாக தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த தொகை “சிறப்பு தோழன்“ ஒருவருடன் மட்டுமே ஒரு வருடத்திற்கு மட்டுமே வாழ்க்கையை பகிர்ந்து கொள்வதற்காகும்.

“10,000 பிராங்குகளுக்கு எனக்கு ஒரு மணிநேரம் வழங்குவதில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள், நான் தரைவிரிப்புகளை விற்க மாட்டேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்கார்ட் தளத்தின் இணை நிறுவனர் பிராட்லி சார்வெட் இதுபற்றி கூறுகையில், “எமது ஊழியர்களில் ஒருவர் எக்லோசியாவை தொடர்பு கொண்டார். 18 வயதான அவர் தனது அறிவிப்பில் உறுதியாக உள்ளார். ஆனால் அவர் தன்னை ஒரு ஆணுக்கு மட்டுப்படுத்த விரும்புகிறார். ஒரு இளவரசர் கவர்ச்சியை அவர் நம்பவில்லை என்பதால், அவளுடைய முதல் பாலியல் துணையைத் தேர்ந்தெடுப்பதில் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை“ என்றார்.

எக்லோசியா சில நாட்களுக்குள் 100 க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களைப் பெற்றுள்ளார். அதில் நான்கு பேர், அவருடன் ஒரு வருடத்தை பகிர்ந்து கொள்வதில் தங்களுக்கு தீவிர ஆர்வம் இருப்பதாகவும், அவர்களுடைய சேவைகளுக்கு 500,000 பிராங்குகள் தருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் கிடைக்கும் தொகையில் இயற்கைக்கு உதவும் வகையில் ஒரு நிறுவனத்தை உருவாக்க வேண்டும் எனவும் எக்லோசியா தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அழைப்பு

Pagetamil

இனி அமெரிக்க இராணுவத்தில் மாற்றுப் பாலினருக்கு இடமில்லை

Pagetamil

Leave a Comment