28.4 C
Jaffna
December 20, 2024
Pagetamil
இலங்கை

அச்சுவேலியில் மின்னல் தாக்கி உயிரிழந்த இ.போ.ச சாரதியின் இறுதிச்சடங்கில் பெருமளவு மக்கள்!

மின்னல் தாக்கி உயிரிழந்த இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை சாரதியின் இறுதிச்சடங்கு இன்று இடம்பெற்றது. இதில் பெருமளவானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அச்சுவேலி, நாவற்காட்டை சேர்ந்த  தியாகராசா மதனபாலன் (40) என்பவர், உழவு இயந்தித்தின் மூலம் உழவில் ஈடுபட்டிருந்த போது, கடந்த 2ஆம் திகதி மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

அவர் வடமராட்சி அல்வாயில் திருமணம் முடித்துள்ளார்.

அவரது இறுதிச்சடங்கு இன்று இடம்பெற்றது.அல்வாயில் சடலம் வைக்கப்பட்டு, அஞ்சலி செய்யப்பட்ட பின்னர், அச்சுவேலிக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டது. அவர் செலுத்திய இ.போ.சபேருந்தும் இறுதி ஊர்வலத்தில் சென்றது.

நாவற்காட்டிலுள்ள வீட்டில் சடலம் வைக்கப்பட்டு, அச்சுவேலி முழக்கன் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் பெருமளவானர்கள் கலந்து கொண்டனர். மயானம் வரை அவர் செலுத்திய பேருந்தும் கொண்டு செல்லப்பட்டது.

வீட்டிலிருந்து சில நூறு மீற்றர் தொலைவில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சடலம், சுமார் 8 கிலோமீற்றர்கள் சுற்றி, வல்வை சந்தி, ஆவரங்கால், அச்சுவேலி சந்தியூடாக மயானத்திற்கு சடலம் கொண்டு செல்லப்பட்டது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
1
+1
4
+1
3
+1
12
+1
3

இதையும் படியுங்கள்

வன்னி மாவட்ட முன்னாள் எம்.பியும் அவரது செயலாளரும் பிணையில் விடுதலை

Pagetamil

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு முன்னாள் பணிப்பாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

Pagetamil

கிளிநொச்சியில் ஒருவருக்கு மலேரியா

Pagetamil

யாழ்ப்பாணத்தை சிங்கப்பூராக்க வர்த்தகர்களாலேயே முடியும்

Pagetamil

எகிறும் விலையில் தேங்காயை சிக்கனமாக பயன்படுத்த முயன்ற சிறுமி பரிதாபமாக பலி!

Pagetamil

Leave a Comment