தலிபான் போராளிகள் வெள்ளிக்கிழமை இரவு நாடு முழுவதும் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதில், 70 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆனால் அனைத்து மாகாணங்களில் இருந்தும் அறிக்கைகள் முழுமையாக வழங்கப்படாததால், இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என ஆப்கான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு காபூலில் மாத்திரம் 17 இறந்த உடல்கள் மற்றும் 40 காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தலிபான் எதி்ப்பாளர்களின் கோட்டையான பஞ்சிர் மாகாணத்தை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து, இந்த வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
தலிபான் அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துள்ளனர். இதுபோன்று மீண்டும் நிகழ்ந்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று அமைப்பினரை எச்சரித்துள்ளனர்.
இராணுவ ஆணையத்தின் தலைவரும், தலிபானின் நிறுவனரின் மகனுமான முல்லா யாகூப் முஜாஹித், யாரும் வானை நோக்கி சுட அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
வானை நோக்கி துப்பாக்கியால் சுடுவதை மீண்டும் மீண்டும் செய்தால் குற்றவாளி கைது செய்யப்பட்டு நிராயுதபாணியாக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.