25.6 C
Jaffna
January 7, 2025
Pagetamil
இந்தியா

காதலியின் திருமணத்தை நிறுத்த மாப்பிள்ளைக்கு அசிட் அடித்த இளைஞன்!

காதலியின் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக மாப்பிள்ளை முகத்தில் ஆசிட் வீசிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கே.எம் நகரைச் சேர்ந்தவர் ஷமீல் அகமது. இவருக்கும் சென்னையை சேர்ந்த பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. கடந்த 17 ஆம் தேதி அன்று தொழிற்சாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, டூவீலரில் வந்த ஒரு மர்ம நபர் ஷமீல் அகமது மீது ஆட்சி வீசிவிட்டு தப்பி சென்று விட்டார்.

இந்த சம்பவத்தில் முகம் மற்றும் தோள்பட்டையில் ஆசிட் பட்டு அலறி துடித்திருக்கிறார் ஷமீல் அகமது. இதைக்கண்டு ஓடி வந்தவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

திருமணத்திற்கு 5 நாட்கள் இருக்கும் நிலையில் இப்படி ஒரு நிலைமையா என்று உறவினர்கள் கவலையில் இருந்தனர்.

சம்பவம் குறித்த புகாரினால் ஆம்பூர் போலீசார் விசாரணை நடத்தி, பேர்ணாம்பட்டை சேந்த சுபேர் அகமதுவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், என் உறவுக்கார பெண்ணை காதலித்து வந்தேன். ஆனால் அவளின் பெற்றோர்கள் ஷமீல் அகமதுவுகுக் திருமணம் செய்து கொடுப்பதாக முடிவு செய்துவிட்டனர். இதனால் இந்தத் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த போதுதான் மாப்பிள்ளையின் மீது ஆசிட் வீசிவிடலாம் என்று முடிவெடுத்தேன். பேர்ணாபட்டில் ஆசிட் வாங்கிக்கொண்டு மூன்று நாட்களாக டூவீலரில் சென்று ஷமீல் அகமதுவை பாலோவ் செய்தேன். 17ஆம் தேதி அன்றுதான் அவர் மீது ஆசிட் வீசி முடிந்தது என்று சொல்லி இருக்கிறார்.

இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஐந்து நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் ஷமீல் அகமதுவுக்கு திருமணம் நடந்திருக்கிறது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்

Pagetamil

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் நோட்டீஸ்

Pagetamil

தமிழகத்தில் வாக்காளர் அதிகரிப்பு

Pagetamil

ஆளுநர் வெளிநடப்பு முதல் குரல் வாக்கெடுப்பு தீர்மானம் வரை: தமிழக சட்டப் பேரவைச் சர்ச்சை!

Pagetamil

இந்திய இராணுவ வீரர்கள் இறப்பு

east tamil

Leave a Comment