25.6 C
Jaffna
January 7, 2025
Pagetamil
இலங்கை

ஆழ்கடலில் அதிரடி வேட்டை: 3100 மில்லியன் ரூபா போதைப்பொருள் சிக்கியது (PHOTOS)

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 301 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளை சர்வதேச கடற்பரப்பில் வைத்தே இலங்கை கடற்படை கைப்பற்றியது. பலநாள் மீன்பிடி படகில் போதைப்பொருளை கடத்திவந்த 4 பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் உட்பட 7 பேரை இலங்கை கடற்படை கைதுசெய்துள்ளது.

முன்னதாக, இலங்கை கடற்படை புலனாய்வு பிரிவு, அரச  புலனாய்வு பிரிவுடன் இணைந்து மேற்கொண்ட ஒரு நடவடிக்கையில், மாலைதீவிற்கு அருகில், இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 290 கிலோகிராம் ஹெரோயினுடன் பல நாள் மீன்பிடி விசைப்படகு ஒன்றை கைப்பற்றியதுடன், ஐந்து சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.

இந்த நடவடிக்கையின் போது கிடைத்த தகவல்கள் மற்றும் இலங்கை காவல்துறைக்கு கிடைத்த பிற உளவுத்தகவல்களின் அடிப்படையில், இலங்கை கடற்படை சர்வதேச ஆழ்கடல் நடவடிக்கையை மேற்கொண்டது.

இலங்கை ஆழ்கடல் ரோந்து கப்பல்களான கஜபாகு மற்றும் சமுத்திர ஆகியன தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இலங்கை கரையில் இருந்து தெற்கே சுமார் 740 கடல் மைல்கள் (சுமார் 1370 கிமீ) சர்வதேச கடல் பகுதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டு மீன்பிடி படகு சோதனையிடப்பட்டது.

இதன்போது, 301 கிலோகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்த 07 வெளிநாட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கடற்படையினரால் அவர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் மொத்த மதிப்பு ரூ. 3100 மில்லியனுக்கும் அதிகமாக இருப்பதாக நம்பப்படுகிறது.

கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட ஹெரோயினை, பாதகாப்பு செயலாளர் பார்வையிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒராங்குட்டான் உயிரிழப்பு

east tamil

வெளிநாடு செல்லும் கனவுக்காக போதைப்பொருள் விற்ற மாணவன் கைது

east tamil

வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் தனியார் பேருந்து சங்கங்கள்!

Pagetamil

இலங்கையில் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை

east tamil

புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

east tamil

Leave a Comment