தென்னாபிரிக்கா அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் அவிஷ்க பெர்ணான்டோ 118 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
சரித் அசலங்க 72 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் ககிசோ ரபாடா மற்றும் கேசவ் மஹாராஜ் ஆகிய இருவரும் தலா இரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பதிலுக்கு 301 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் மார்க்ரம் 96, டுசன் 59 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் அகில தனஞ்சய 65 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
ஆட்ட நாயகன் அவிஷ்க பெர்னாண்டோ.
அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.
இதேவேளை, இந்த வெற்றியை தொடர்ந்து உலகக்கோப்பை போட்டிக்கான புள்ளிப்பட்டியலிலும் இலங்கை சற்று முன்னகர்ந்துள்ளது.