28.2 C
Jaffna
April 20, 2024
இலங்கை

வவுனியா சதொச விற்பனை நிலையங்களில் சீனியைப் பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் மக்கள்

வவுனியா சதொச விற்பனை நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சீனியைப் பெற்றுச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.

அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை அறிவித்துள்ளதுடன், அப் பொருட்களை நாடு பூராகவும் உள்ள சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாகவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள வவுனியா மாவட்டத்தில் உள்ள 14 சதொச விற்பனை நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிரைசயில் நின்று சீனியைப் பெற்றுக் செல்கின்றனர். ஒருவருக்கு மூன்று கிலோ வீதம் சீனி விநியோகிக்கப்பட்டு வருவதுடன், கறுப்பு சீனி 125 ரூபாய்க்கும், வெள்ளை சீனி 122 ரூபாய்க்கும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

கடந்த சில நாட்களாக வவுனியாவிலும் சீனிக்கு தட்டுப்பாடு நிலவியதுடன், தனியார் விற்பனை நிலையங்களில் 200 ரூபாய்க்கு மேல் சீனி விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் குறைந்த விலையில் சீனியைப் பெற்க் கொள்வதற்காக அதிகளவிலான மக்கள் கோவிட் அச்சுறுத்தலுகு;கு மத்தியிலும் சதொவிற்கு வருகை தந்து சீனியைப் பெற்று செல்வதையும், சீனி கிடைத்தமையால் மகிழ்ச்சி தெரிவிப்பதையும் அவதானிக்க முடிந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாலித தெவரப்பெருமவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரணில்

Pagetamil

வடக்கில் சுற்றுலா பயணிகளுக்கு தங்குமிடம் வழங்குவோர் பதிவு செய்ய வேண்டும்!

Pagetamil

யாழ்ப்பாணத்துக்கு ஏற்படப் போகும் பேராபத்து: கிரிக்கெட்டை காட்டி மக்களை மயக்கும் உத்தியா?

Pagetamil

சாப்பிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!

Pagetamil

காங்கேசன்துறையில் உயிர்காப்பு நீச்சல் பிரிவு

Pagetamil

Leave a Comment