வவுனியா ஹொரவப்போத்தானை வீதியில் கோவிற்குளம் சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள பிரபல கோதுமை மா விநியோக களஞ்சியசாலையில் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் திடீர் சோதனை நடவடிக்கையினை இன்று (03) முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது, காலாவதி திகதி, உற்பத்தி திகதி, விலை என்பவற்றினை மாற்றம் செய்து அதன் மேல் புதிய விலைப் பட்டியல் ஒட்டி விற்பனைக்காக விநியோகிப்பதற்கு தயார் செய்து வைத்திருந்த கோதுமை மா மூடைகளை வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் கைப்பற்றியிருந்தனர்.
கோதுமை மா மூடைகள் சிலவற்றினை எடுத்துச் சென்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் குறித்த மா விநியோக நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1