வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக மேலும் இருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் கோவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் பலரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த வவுனியாவின் பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த இருவர் மரணமடைந்துள்ளனர்.
ஒருவர் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கோவிட் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு (01) மரணமடைந்துள்ளார். மற்றைய நபர் வீட்டில் கோவிட் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று காலை (02) மரணமடைந்துள்ளார்.
குறித்த இருவரது சடலங்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அடக்கம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, வவுனியாவில் நேற்றைய தினம் (01.09) போகஸ்வேவ, றம்பைவெட்டி, தோணிக்கல், சூசைப்பிள்ளையார்குளம், இளமருதங்குளம் ஆகிய பகுதிகளைச் 5 பேர் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.