கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் பயன்பாட்டிலிருந்து கைத்தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சிறை அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினரின் அறையை ஆய்வு செய்ய சென்றபோது தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் பதியுதீன் கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது சிறைச்சாலை அதிகாரிகள் அவரது கூண்டுக்கு சென்றுள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகளை கண்டதும், கூண்டுக்கு வெளியே கைத்தொலைபேசியை பதியுதீன் வீசியெறிந்துள்ளார்.
எனினும், அது மீட்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1