கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி பகுதியில் பயணத் தடைவேளையில் சுகாதார நடைமுறைகளை மீறி வீதியில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டோர் கோப்பாய் பொலிசாரின் வருகையை கண்டவுடன் விற்பனை செய்த மரக்கறிகளையும் கைவிட்டு தப்பியோடிய சம்பவம் இன்று காலை இடம்பெற்றது
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவன் அம்மன் வீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில். காலை வேளையில் மரக்கறி வியாபாரிகள் அவ்விடத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதனால் அவ்விடத்தில் சனக்கூட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது.
கோப்பாய் பொலிசார் ஏற்கனவே அவ்விடத்தில் மரக்கறி வியாபாரம் செய்ய தடை எனவும் அவ்விடத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டோரை விரட்டியிருந்தனர்.
எனினும், வியாபாரிகள் அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இன்றைய தினம் காலை வேளையில் கோப்பாய் பொலிஸார் வாகனம் அவ்விடத்திற்கு வந்தபோது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் தமது வியாபார பொருட்களையும் கைவிட்டு தப்பியோடியுள்ளனர்
எனினும் பொலிசார் திரும்பி சென்ற பின்னர் தமது மரக்கறி பொருட்களை எடுத்து சென்றனர்.