நாடளாவிய ரீதியில் தற்போது அமலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை திங்கட்கிழமைக்கு பின்னரும் நீடிப்பதா இல்லையா என்ற முடிவு நாளை எடுக்கப்படும்.
கோவிட் -19 தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவினால் இந்த முடிவு எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
பணிக்குழு உறுப்பினர்கள் நாளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடுகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று, இறப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து ஓகஸ்ட் 20 ஆம் திகதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
செப்டம்பர் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1