சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனது 70 வது ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுகிறது.
முன்னாள் பிரதமர் மறைந்த S.W.R.D.பண்டாரநாயக்கவால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி 1951 செப்டம்பர் 2 ஆம் திகதி உருவாக்கப்பட்டது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி கடந்த 70 ஆண்டுகளில் பல ஜனாதிபதிகளையும் பிரதமர்களையும் உருவாக்கியுள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் காரணமாக, சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, ஆண்டுவிழாவை நினைவுகூரும் மத மற்றும் சமூக நிகழ்வுகள் நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை 5 மணிக்கு பேஸ்புக் மூலம் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிடுகிறார்.